கோழி ரசம்

off off off off off 0

தேவையான பொருட்கள்:

கோழி - 1 கிலோ

சின்ன வெங்காயம் - 20

பூண்டு - 10 பல்

தக்காளி - 3

மிளகாய் தூள் - 4 மேசைக்கரண்டி

மல்லித்தூள் - 6 மேசைக்கரண்டி

மஞ்சள் தூள் - 1 தேக்கரண்டி

மிளகு - 1 தேக்கரண்டி

சீரகம் - 1 தேக்கரண்டி

சோம்பு - 1 தேக்கரண்டி

சோம்பு - 1/2 தேக்கரண்டி

வெந்தயம் - 1/2 தேக்கரண்டி

கறிவேப்பிலை - சிறிது

நல்லெண்ணெய் - 50 மி.லி

உப்பு - தேவையான அளவு

தாளிக்க:

பட்டை - 1

கிராம்பு - 1

அன்னாசிப்பூ - 1

செய்முறை:

ஒரு கடாயில் ஒரு தேக்கரண்டி எண்ணெய் விட்டு மிளகு, சீரகம், சோம்பு, ஆகியவற்றை வறுத்து மஞ்சள் தூள், 5 பல் பூண்டு, 10 சின்ன வெங்காயம் சேர்த்து அரைக்க வேண்டும். அரைத்தவற்றை கோழியில் பிசற வேண்டும்.

ஒரு பாத்திரத்தில் எண்ணெய் விட்டு பட்டை, கிராம்பு, அன்னாசிப்பூ, சோம்பு, வெந்தயம் போட்டு தாளித்து பொடியாக நறுக்கிய வெங்காயம், பூண்டு, தக்காளி, கறிவேப்பிலை ஆகியவற்றை வதக்கி, கோழியை போட்டு வதக்கவேண்டும்.

10 நிமிடம் சிறு தீயில் வதக்கி மிளகாய் தூள், மல்லித்தூள் போட்டு கிளறி 5 கிளாஸ் தண்ணீர் ஊற்றி உப்பு சேர்த்து வேக விடவேண்டும்.

குறிப்புகள்: