கோழி குருமா
தேவையான பொருட்கள்:
கோழி - 500 கிராம்
சின்ன வெங்காயம் - 20
தக்காளி - 4
பச்சை மிளகாய் - 10
தேங்காய் - ஒரு மூடி
பொட்டுக்கடலை - 2 மேசைக்கரண்டி
மிளகு - 1 தேக்கரண்டி
சோம்பு - 1 1/2 தேக்கரண்டி
பட்டை - 2
ஏலக்காய் - 2
கிராம்பு - 2
அன்னாசிப்பூ - 2
கசகசா - 1 தேக்கரண்டி
இஞ்சி - சிறிது
பூண்டு - 8 பல்
முந்திரிப்பருப்பு - 10
மல்லித்தூள் - 4 மேசைக்கரண்டி
மிளகாய் தூள் - 1 மேசைக்கரண்டி
மஞ்சள் தூள் - 1 மேசைக்கரண்டி
எண்ணெய் - 50 மி.லி
உப்பு - தேவையான அளவு
செய்முறை:
ஒரு கடாயில் சிறிது எண்ணெய் விட்டு தேங்காய், பொட்டுக்கடலை, 8 பச்சை மிளகாய், ஒரு தேக்கரண்டி சோம்பு, ஒரு தேக்கரண்டி மிளகு, ஒரு பட்டை, ஒரு கிராம்பு, 2 ஏலக்காய், ஒரு அன்னாசி மொக்கு, இஞ்சி, பூண்டு, 5 சின்ன வெங்காயம், முந்திரிப்பருப்பு ஆகியவற்றை வதக்கி நன்கு அரைக்க வேண்டும்.
ஒரு பாத்திரத்தில் எண்ணெய் விட்டு அரை தேக்கரண்டி சோம்பு, தலா ஒரு பட்டை, கிராம்பு, அன்னாசிப்பூ ஆகியவற்றை போட்டு தாளிக்கவும்.
பிறகு பொடிதாக அரிந்த வெங்காயம், தக்காளி, 2 மிளகாய் கீறி சேர்த்து வதக்கி, கோழியை மஞ்சள் தூளுடன் சேர்த்து நன்கு வதக்க வேண்டும்.
மிளகாய் தூள், மல்லி தூள், உப்பு போட்டு 5 டம்ளர் தண்ணீர் சேர்த்து கொதிக்க விட வேண்டும்.
பாதி கொதித்தவுடன் அரைத்தவற்றை சேர்த்து மேலும் கொதிக்க விடவும்.
அடுப்பை அணைத்தவுடன் எலுமிச்சைச்சாறு ஒரு தேக்கரண்டி சேர்த்து பரிமாறவும்.