கோழி இறைச்சிப் பிரட்டல்

off off off off off 0

தேவையான பொருட்கள்:

கோழி - ஒன்று

உலர்ந்த மிளகாய் - 15

பூண்டு - 5 பல்லு

இஞ்சி - அரை அங்குலம்

மஞ்சள் பொடி - ஒரு சிட்டிகை

சீரகம் - 1/2 தேக்கரண்டி

சோம்பு - ஒரு தேக்கரண்டி

மிளகு - 12 தேக்கரண்டி

பட்டை - ஒரு அங்குலம்

பிரிஞ்சி இலை - சிறிதளவு

கறிவேப்பிலை - சிறிதளவு

தேங்காய்ப்பால் - 1/2 கப்

சின்ன வெங்காயம் - 10 கப் அரிந்தது

எலுமிச்சம்பழச்சாறு - 1 மேசைக்கரண்டி

நெய் - 3 மேசைக்கரண்டி

உப்பு - தேவையான அளவு

செய்முறை:

கோழி இறைச்சியைக் கழுவி ஓரளவு நடுத்தரத் துண்டங்களாக்கிக் கொள்ளவும்.

ஒரு பாத்திரத்தில் இறைச்சி, பொடி செய்த பொருட்கள், சிறிதாக அரிந்த இஞ்சி, பூண்டு, பட்டை, பிரிஞ்சி இலை, கறிவேப்பிலை, மஞ்சள் பொடி, இரண்டாந்தடவை பிழிந்த தேங்காய்ப்பால் ஆகியவற்றோடு சுவைக்கேற்ப எலுமிச்சை பழச்சாறு, உப்பு ஆகியவற்றையும் இட்டு மூடி நன்றாக வேக விடவும்.

கோழி நன்றாக வெந்ததும் முதலில் எடுத்த கெட்டி தேங்காய் பாலையும் ஊற்றி மேலும் 10 நிமிடங்களுக்கு வேக விடவும்.

இறைச்சிக் குழம்பை வேறொரு பாத்திரத்தில் மாற்றி வெறும் பாத்திரத்தில் நெய்யை ஊற்றி நன்றாகச் சூடானதும் அரிந்த வெங்காயத்தை இட்டு பொன்னிறமாகப் பொரிக்கவும்.

பின்னர் இதனுள் எடுத்து வைத்த இறைச்சியை மட்டும் (குழம்பு இல்லாமல்) கொட்டிக் குறைந்த வெப்பத்தில் மேலும் பத்து நிமிடங்களுக்கு வேக விடவும்.

பின்னர் குழம்பைக் கொட்டிக் குழம்பானது ஓரளவு கெட்டியாகும் வரை வேக வைத்து இறக்கி பரிமாறவும்.

குறிப்புகள்: