கொத்துக்கறி பொடிமாஸ்

off off off off off 0

தேவையான பொருட்கள்:

கொத்துக்கறி - 250 கிராம்

சின்ன வெங்காயம் - 25

பச்சை மிளகாய் - 3

கறிவேப்பிலை, கொத்தமல்லி - சிறிதளவு

எண்ணெய் - 100 கிராம்

உப்பு - தேவையான அளவு

அரைப்பதற்கு:

மிளகாய் - 15

சீரகம் - 1 தேக்கரண்டி

சோம்பு - 1 தேக்கரண்டி

கசகசா - 1 தேக்கரண்டி

மஞ்சள் தூள் - 1/2 தேக்கரண்டி

பூண்டு - 5 பல்

இஞ்சி - சிறிது

தேங்காய் - 2 சில்

பட்டை - 1

கிராம்பு - 1

ஏலக்காய் - 1

செய்முறை:

கொத்துக்கறியில் அரைத்தவற்றை சேர்த்து உப்பு, பொடியாக நறுக்கிய வெங்காயத்தில் பாதி, பச்சை மிளகாய், கறிவேப்பிலை ஆகியவற்றுடன் இரண்டு டம்ளர் தண்ணீர் சேர்த்து மூடி வேக விட வேண்டும்.

தண்ணீர் வற்றிய உடன் வேறு ஒரு கடாயில் எண்ணெய் விட்டு மீதி வெங்காயம், கொத்தமல்லி இலை, வேக வைத்த கறியை சேர்த்து நன்கு வதக்கி தேங்காய் துருவி போட்டு கிளறி இறக்கி பரிமாறவும்.

குறிப்புகள்: