கெட்டி குழம்பு
தேவையான பொருட்கள்:
கத்தரிக்காய் - 1/4 கிலோ
சின்ன வெங்காயம் - 100 கிராம்
பூண்டு - 10 பல்
புளி - பெரிய எலுமிச்சையளவு
துவரம் பருப்பு - 1 மேசைக்கரண்டி
கடுகு, உளுத்தம் பருப்பு - 1 மேசைக்கரண்டி
மஞ்சள் பொடி - 1 தேக்கரண்டி
பெருங்காயம் - 1/4 தேக்கரண்டி
கறிவேப்பிலை - இரண்டு கொத்து
அரிசி மாவு - 1 மேசைக்கரண்டி
எண்ணெய் - 3 மேசைக்கரண்டி
உப்பு - தேவையான அளவு
வறுத்து அரைக்க:
வரமிளகாய் - 7
மல்லி விதை - 2 மேசைக்கரண்டி
கடலைப்பருப்பு - 1 மேசைக்கரண்டி
ஊளுந்து - 1 மேசைக்கரண்டி
வெந்தயம் - 1 தேக்கரண்டி
சீரகம் - 1 தேக்கரண்டி
செய்முறை:
புளியை இருநூற்றைம்பது மில்லி தண்ணீரில் ஊற வைத்து கரைத்து வடிகட்டவும்.
அரைக்க வைத்துள்ளவற்றை சிவக்க எண்ணெய் விடாமல் வறுத்து அரைக்கவும்.
அரைத்த விழுது, உப்பு, புளி மூன்றையும் ஒன்றாக கலக்கி வைக்கவும்.
வெங்காயம், கத்தரிக்காயை குறுக்காக நான்காகவும், பூண்டை ஒன்றிரண்டாக தட்டியும் வைக்கவும்.
அடுப்பில் கடாயை வைத்து எண்ணெய் ஊற்றி கடுகு, உளுத்தம் பருப்பு, துவரம் பருப்பு போட்டு வெடித்து சிவந்ததும், வெங்காயம், பூண்டு, கறிவேப்பிலை போட்டு வதக்கவும்.
பாதி வதங்கியதும் பெருங்காயத்தூள், மஞ்சள் பொடி, கத்தரிக்காய் துண்டுகளைப் போட்டு வதக்கவும்.
காய் நன்றாக வதங்கியதும் புளிக்கரைசலை ஊற்றவும்.
எல்லாம் சேர்ந்து கொதித்து பச்சை வாசனை போனதும் அரிசி மாவை கால் டம்ளர் தண்ணீர் விட்டு கொதிக்க விடவும்.
நன்றாக கொதித்து குழம்பு கெட்டியானதும் இறக்கி பரிமாறவும்.