குழிப்பணியாரம் (1)
0
தேவையான பொருட்கள்:
புழுங்கல் அரிசி - ஒரு டம்ளர்
பச்சரிசி - ஒரு டம்ளர்
கடலை பருப்பு - 1/2 டம்ளர்
வெல்லம் - 1/4 கிலோ
எண்ணெய் அல்லது நெய் - சின்ன கப்
செய்முறை:
அரிசியையும், கடலை பருப்பையும் அரை மணிநேரம் ஊறவைத்து பிறகு அரைக்கவும்.
வெல்லத்தை காய்ச்சி வடிகட்டி, அரைத்து வைத்துள்ள மாவில் ஊற்றிக் கிளறவும்.
குழிப்பணியார கல்லை அடுப்பில் வைத்து, மாவினை ஊற்றி இளம் சூட்டில் வேகவிடவும்.
எண்ணையை ஊற்றி பொன்னிறமாக வந்ததும் அதை எடுக்கவும்.