காய் மண்டி

off off off off off 0

தேவையான பொருட்கள்:

வாழைக்காய் - 1

உருளைக்கிழங்கு - 1 அல்லது 2

கத்திரிக்காய் - 3 அல்லது 4

முருங்கைக்காய் - 1

மாங்காய் வற்றல் - 6 அல்லது 7

புளி - 1 சிறிய எலுமிச்சை அளவு

வெங்காயம் - சிறிது

தக்காளி - 1

பச்சைமிளகாய் - காரத்திற்கேற்ப

உப்பு - தேவையான அளவு

தாளிக்க:

கடுகு - 1 தேக்கரண்டி

உளுந்து - 1 தேக்கரண்டி

கறிவேப்பிலை - சிறிது

எண்ணெய் - 2 அல்லது 3 மேசைக்கரண்டி

செய்முறை:

முதலில் வாணலியில் எண்ணெய் ஊற்றி கடுகு, உளுந்து, கறிவேப்பிலை தாளித்து பிறகு வெங்காயம், தக்காளி, பச்சைமிளகாய் ஆகியவற்றை சேர்த்து நன்றாக வதக்க வேண்டும்.

பின் காய்கறிகள் அனைத்தையும் சேர்த்து 2 நிமிடம் வதக்கி புளி கரைசலையும் சேர்க்கவும். காய்கறிகள் வேக தேவையான அளவு தண்ணீர் ஊற்றவும். கெட்டியாக வருவதற்கு தேவைப்பட்டால் அரிசி மாவு கொஞ்சம் கரைத்துவிடலாம், அல்லது அரிசி களைந்த தண்ணீர் ஊற்றலாம்.

தேவையான அளவு உப்பு சேர்த்து காய்கறிகள் வெந்தவுடன் அடுப்பிலிருந்து இறக்கிவிடவும்.

குறிப்புகள்: