காய்கறி மண்டி
தேவையான பொருட்கள்:
கத்தரிக்காய் - 100 கிராம்
முருங்கைக்காய் - 2
உருளைக்கிழங்கு - 1
துவரை பருப்பு - 50 கிராம்
மஞ்சள் பொடி - 1 டேபிள் ஸ்பூன்
சிறிய வெங்காயம் - 20
தக்காளி - 2
பச்சை மிளகாய் - 10
கறிவேப்பிலை - இரண்டு கொத்து
புளி - பெரிய எலுமிச்சையளவு
கடுகு - 1 தேக்கரண்டி
சோம்பு - 1/2 தேக்கரண்டி
எண்ணை - 3 மேசைக்கரண்டி
உப்பு – தேவையான அளவு
செய்முறை:
பருப்பை மஞ்சள் பொடி சேர்த்து மலர வேக விடவும்.
காய்களை சிறிது பெரிய துண்டுகளாக நறுக்கவும்.
வெங்காயத்தை இரண்டாகவும், தக்காளியை நான்காகவும், ப. மிளகாயை குறுக்காக இரண்டாகவும் நறுக்கவும்.
புளியை இரண்டு டம்ளர் தண்ணீரில் கரைத்து வடி கட்டி வைக்கவும்.
அடுப்பில் வாணலியை வைத்து எண்ணை ஊற்றி கடுகு, சோம்பு தாளித்து வாசனை வந்ததும் வெங்காயம் சேர்த்து வதக்கவும்.
பிறகு பச்சை மிளகாய், காய்களைப் போட்டு பச்சை வாசனை போக நன்கு வதக்கவும்.
கறிவேப்பிலை, தக்காளி சேர்க்கவும். நன்கு வதங்கியதும் புளிக் கரைசலை ஊற்றி உப்பு போட்டு கொதிக்க விடவும்.
பத்து நிமிடம் கழித்து பருப்பு சேர்த்து ஐந்து நிமிடம் கொதிக்க விட்டு இறக்கி பரிமாறவும்.