காய்கறி புளி மண்டி
தேவையான பொருட்கள்:
நறுக்கிய வெண்டைக்காய் - 100 கிராம்
நறுக்கிய கேரட் - 1
நறுக்கிய தக்காளி - 2
நறுக்கிய உருளைக்கிழங்கு - 2
புளி (ஊற வைத்து கரைத்த புளி தண்ணீர்) - நெல்லிக்காய் அளவு
பொடியாக நறுக்கிய பச்சை மிளகாய் - 10
பொடியாக நறுக்கிய சிறிய வெங்காயம் - 20
வெல்லம் (தேவை எனில்) - ஒரு பாக்கு அளவு
பூண்டு (உரித்தது) - 20 பல்
நல்லெண்ணெய் - 6 தேக்கரண்டி
உப்பு - தேவையான அளவு
தாளிக்க:
கடுகு - 1/2 தேக்கரண்டி
உளுத்தம்பருப்பு - 1/4 தேக்கரண்டி
வெந்தயம் - 1/4 தேக்கரண்டி
பெருங்காயத்தூள் - 1 சிட்டிகை
செய்முறை:
வாணலியில் நல்லெண்ணைய் ஊற்றி காய்ந்ததும் தாளிக்கும் பொருட்களை போட்டவும்.
பின் வெங்காயம், தக்காளி, பூண்டு, பச்சை மிளகாய் இவற்றை போட்டு நன்றாக வதக்கவும்.
இத்துடன் நறுக்கிய காய்கறிகளை போட்டு வதக்கி கரைத்து வைத்துள்ள புளிதண்ணீரை ஊற்றவேண்டும். தேவையான அளவு உப்பு சேர்க்கவும்.
கொதித்தபின் மிதமான தீயில் வைத்து காய்கறிகள் வெந்தபின் இறக்கி பரிமாறவும்.