கல்கண்டு வடை

off off off off off 0

தேவையான பொருட்கள்:

உளுத்தம்பருப்பு - 1 கப் ( அளந்து எடுத்து, அதிலிருந்து ஒரு மேசைக்கரண்டி எடுத்து விடவும்)

பச்சரிசி - 1 மேசைக்கரண்டி

பெரிய கல்கண்டு - 1 கப்

எண்ணெய் - பொரிக்க தேவையான அளவு

செய்முறை:

அரிசி, உளுத்தம்பருப்பைக் கழுவி தண்ணீர் விட்டு ஐஸ் பெட்டியில் ஊற வைக்கவும்.

ஒரு மணி நேரம் கழித்து கிரைண்டரில், மிக நைசாக, முடிந்த அளவு குறைந்த தண்ணீர் விட்டு அரைக்கவும்.

கல்கண்டை நைசாகப் பொடிசெய்து கொள்ளவும். அரைத்த விழுதை இறுகுவதற்காக 15 நிமிடம் ஐஸ் பெட்டியில் வைக்கவும்.

பின் வெளியில் எடுத்து கல்கண்டு பொடியைப் போட்டு நன்கு கலக்கவும். மிகச் சிறிய வடைகளாகத் தட்டி எண்ணெயில் பொரித்து எடுக்கவும். இது நன்கு உப்பி வரும். அதனால் 3, 4 ஆகப் போடவும்.

இனிப்பு இருப்பதால் நிறம் மிகவும் சிவந்து விடாமல் இருக்க அடுப்பை மிக நிதானமாக எரிய விடவும்.

குறிப்புகள்:

2, 3 வரை நாட்கள் கெடாமல் இருக்கும்.