கறிப் பிரட்டல்

off off off off off 0

தேவையான பொருட்கள்:

ஆட்டுக் கறி - 1/2 கிலோ

சிறிய வெங்காயம் - 100 கிராம்

மிளகாய்ப் பொடி - 1 மேசைக்கரண்டி

மல்லிப் பொடி - 1 மேசைக்கரண்டி

மஞ்சள் பொடி - 1 தேக்கரண்டி

இலை, அன்னாசிப்பூ - தாளிக்க

சோம்பு - 1/2 தேக்கரண்டி

கறிவேப்பிலை - 2 கொத்து

எண்ணை - 3 மேசைக்கரண்டி

உப்பு - தேவையான அளவு

அரைக்க:

சோம்பு - 1 தேக்கரண்டி

சீரகம் - 1 தேக்கரண்டி

கசகசா - 1 தேக்கரண்டி

பட்டை - ஒரு சிறிய துண்டு

இஞ்சி - 5 கிராம்

பூண்டு - 6 பல்

தேங்காய் துருவல் - 3 மேசைக்கரண்டி

செய்முறை:

முதலில் கறியை கழுவி சிறியதாகவும் இல்லாமல் பெரியதுமாகவும் இல்லாமல் நடுத்தர அளவு துண்டுகளாக நறுக்கவும்.

வெங்காயத்தை இரண்டிரண்டாக குறுக்கில் நறுக்கி வைக்கவும்.

அரைக்க வைத்துள்ளவற்றில் தேங்காயை தனியாகவும், மற்ற சாமான்களை தனியாகவும் அரைத்து வைக்கவும்.

அடுப்பில் குக்கரை வைத்து இரண்டு டேபிள் தேக்கரண்டி எண்ணை விட்டு இலை, அன்னாசிப்பூ தாளிக்கவும்.

பின் வெங்காயத்தைப் போட்டு வதக்கி கறி சேர்த்து ஐந்து நிமிடம் வதக்கவும்.

பிறகு மல்லிப் பொடி, மிளகாய்ப் பொடி, மஞ்சள் பொடி, உப்பு, அரைத்த சோம்பு மசாலா விழுது போட்டு இரண்டு நிமிடம் கிண்டி அரை டம்ளர் தண்ணிர் விட்டு குக்கரை மூடி நான்கு விசில் விட்டு இறக்கவும்.

வெந்ததும் குக்கரைத் திறந்து தேங்காய் விழுது சேர்த்து மேலும் ஐந்து நிமிடம் மூடாமல் வேக வைக்கவும்.

அடுப்பில் வானலியை வைத்து மீதமுள்ள ஒரு டேபிள் ஸ்பூன் எண்ணை விட்டு சோம்பு போட்டு பொரிந்ததும் இரண்டு சின்ன வெங்காயம் தட்டிப் போட்டு சிவந்ததும் கறிவேப்பிலை உருவிப் போடவும்.

குக்கரில் உள்ள கறிக் கலவையை கொட்டி மூடி, அடுப்பை அனைத்து விடவும்.

குறிப்புகள்: