கந்தரப்பம்
0
தேவையான பொருட்கள்:
பச்சரிசி - 2 ஆழாக்கு
உளுந்து - 1/2 ஆழாக்கு
வெல்லம் - 1/4 கிலோ
தேங்காய் - அரை மூடி
எண்ணெய் - பொரிக்க தேவையான அளவு
உப்பு - தேவையான அளவு
செய்முறை:
அரிசியும், உளுந்தையும் ஒன்றாக அரை மணி நேரம் ஊறவைக்க வேண்டும். தேங்காயை துருவிக்கொள்ள வேண்டும்.
முதலில் கிரைண்டரில் தேங்காயை போட்டு அரைத்து, பிறகு அரிசியையும், ஊளுந்தையும் கழுவிப் போட்டு, உப்புச்சேர்த்து மைய அரைத்துக் கொள்ள வேண்டும்.
பிறகு அதனுடன் வெல்லம் சேர்த்து அரைத்துக் கொள்ள வேண்டும். ஒரு கடாயில் எண்ணெய்யை ஊற்றி காய்ந்தவுடன் ஏந்தலான கரண்டியால் மாவை மொண்டு ஊற்ற வேண்டும். ஒருபுறம் வெந்தவுடன் திருப்பி போட்டு வேகவிட்டு எடுக்கவேண்டும்.