கத்தரிக்காய் முருங்கைக்காய் காரக்குழம்பு

on on on on on 1 - Excellent!
5 நட்சத்திரங்கள் - 1 மதிப்பாய்வின் அடிப்படையில்

தேவையான பொருட்கள்:

பிஞ்சு கத்தரிக்காய் – 1/4 கிலோ

முருங்கைக்காய் - 1

சின்ன வெங்காயம் – 20

தக்காளி – 2

பெரிய வெங்காயம் – 1

தேங்காய் துருவல் – 2 மேசைக்கரண்டி

புளி – ஒரு சிறிய எலுமிச்சையளவு

மஞ்சள் பொடி – 1/2 தேக்கரண்டி

சாம்பார் பொடி – 2 1/2 மேசைக்கரண்டி

கடுகு – 1 தேக்கரண்டி

கடலைப்பருப்பு – 1 மேசைக்கரண்டி

கறிவேப்பிலை – இரண்டு கொத்து

வரமிளகாய் – 2

பொடித்த வெல்லம் – 1 மேசைக்கரண்டி

எண்ணெய் - 3 மேசைக்கரண்டி

உப்பு – தேவையான அளவு

செய்முறை:

தக்காளி, கத்தரிக்காய்களை நான்காகவும், முருங்கைக்காயை ஒன்றரை அங்குள நீளமான துண்டுகளாகவும் நறுக்கவும்.

சின்ன வெங்காயத்தை தோலுரித்து வைக்கவும். புளியை முன்னூறு மில்லி தண்ணீரில் ஊற வைத்து வடிகட்டி வைக்கவும். பெரிய வெங்காயத்தை நீளமாக நறுக்கவும்.

அடுப்பில் கடாயை வைத்து அரை ஸ்பூன் எண்ணெய் ஊற்றி பெரிய வெங்காயத்தைப் போட்டு வதக்கி, நன்கு வதங்கியதும் தக்காளியை சேர்க்கவும்.

தக்காளி நன்கு கரைந்ததும் சாம்பார் பொடி, தேங்காய் துருவல் சேர்த்து மேலும் இரண்டு நிமிடம் வதக்கி இறக்கி ஆற வைத்து விழுதாக அரைக்கவும்.

அடுப்பில் வாணலியை வைத்து எண்ணெய் முழுவதும் ஊற்றி கடுகு, கடலைப்பருப்பு, வரமிளகாய் தாளித்து சின்ன வெங்காயம் சேர்த்து வதக்கவும்.

இரண்டு நிமிடம் கழித்து கறிவேப்பிலை, காய்களைப் போட்டு மூன்று நிமிடம் வதக்கி உப்பு, மஞ்சள் பொடி, புளி சேர்த்து ஐந்து நிமிடம் கொதிக்க விடவும்.

பின் அரைத்த விழுதைப் போட்டு மேலும் எட்டு நிமிடங்கள் கொதிக்க விட்டு (குழம்பு கெட்டியாகி மேலே எண்ணெய் மிதக்க வேண்டும்) வெல்லம் சேர்த்து இரண்டு நிமிடம் கழித்து இறக்கவும்.

குறிப்புகள்: