கத்தரிக்காய் பொரியல்
தேவையான பொருட்கள்:
கத்தரிக்காய் - 1/4 கிலோ
வெங்காயம் - 2
மஞ்சள் பொடி - 1 தேக்கரண்டி
கடுகு - 1 மேசைக்கரண்டி
கறிவேப்பிலை - இரண்டு கொத்து
எண்ணை - 25 மி.லி
உப்பு - தேவையான அளவு
வறுத்து பொடிக்க:
வர மிளகாய் - 5
கடலை பருப்பு - 2 மேசைக்கரண்டி
சோம்பு - 1 தேக்கரண்டி
சீரகம் - 1/2 தேக்கரண்டி
மிளகு - 5
செய்முறை:
கத்தரிக்காயை நீள நீளமாக நறுக்கி தண்ணிரில் போடவும்.
பொடிக்க வைத்துள்ள சாமான்களை எண்ணை விடாமல் சிவக்க வறுத்து சன்ன ரவை குருணை போல் பொடிக்கவும்.
வெங்காயத்தை மெலிதாக, நீளமாக வெட்டி வைக்கவும்.
அடுப்பில் வாணலியை வைத்து எண்ணை ஊற்றி கடுகு போட்டு வெடித்ததும் வெங்காயம், கறிவேப்பிலை சேர்த்து வதக்கவும்.
வதங்கியதும் கக்தரிக்காய் துண்டுகள், மஞ்சள் பொடி, உப்பு போட்டு அடுப்பை மெதுவாக வைத்து வதக்கவும்.
கத்தரிக்காய் முக்கால் வேக்காடு வெந்ததும் பொடி பரவலாக தூவி ஐந்து நிமிடம் கிளறி இறக்கி பரிமாறவும்.