கடாய் இறால்

off off off off off 0

தேவையான பொருட்கள்:

இறால் - 1 கிலோ

எண்ணெய் -3 அல்லது 4 டேபிள் ஸ்பூன்

இஞ்சி பூண்டு பேஸ்ட் - 2 தேக்கரண்டி

வெங்காயம் - 200 கிராம்

தக்காளி - 100 கிராம்

மிளகாய்த்தூள் - 1 அல்லது 2 தேக்கரண்டி

சீரகத்தூள் - 1/2 தேக்கரண்டி

சோம்புத்தூள் - 1/4 தேக்கரண்டி

மல்லி இலை - 2 மேசைக்கரண்டி

பச்சை மிளகாய் - 2

தயிர் - 1 தேக்கரண்டி

உப்பு - தேவையான அளவு

செய்முறை:

முதலில் இறாலை உரித்து சுத்தம் செய்து நன்கு அலசி எடுத்து தண்ணீர் வடிகட்டவும். வெங்காயம், தக்காளி, மிளகாய், மல்லி இலை கட் பண்ணி வைக்கவும்.

வடிகட்டிய இறாலில் தயிர், கொஞ்சம் உப்பு, 1 டீஸ்பூன் மிளகாய்த்தூள், 1 தேக்கரண்டி இஞ்சிபூண்டு சேர்த்து கலந்து வைக்கவும்.

அடிகனமான கடாயில் எண்ணெய் விட்டு காய்ந்தவுடன் வெங்காயம் போட்டு வதக்கவும், பின்பு இஞ்சி பூண்டு, மிளகாய், தக்காளி, கொத்தமல்லி இலை, உப்பு, மிளகாய்த்தூள், சீரகத்தூள், சோம்புத்தூள் சேர்த்து பிரட்டவும். உப்பு பார்த்து சேர்க்கவும், ஏனெனில் ஏற்கனவே உப்பு போட்டு கலந்து வைத்தோம். மூடி போட்டு ஐந்து நிமிடம் வைக்கவும்.

எல்லாம் சேர்ந்து கூட்டுபோல் ஆனவுடன் இறாலை போடவும், மூடி போடவும்,இறாலில் தண்ணீர் ஊறும்,

10 - 15 நிமிடம் கழித்து கெட்டியானவுடன் இறக்கவும். மல்லி இலை தூவி பரிமாறவும்.

குறிப்புகள்: