எண்ணெய் கத்தரிக்காய் வறுவல்

on on on on on 1 - Excellent!
5 நட்சத்திரங்கள் - 1 மதிப்பாய்வின் அடிப்படையில்

தேவையான பொருட்கள்:

பிஞ்சி கத்தரிக்காய் - 8

சின்ன வெங்காயம் - 10

பச்சைமிளகாய் - 2

புளி - ஒரு நெல்லிக்காய் அளவு

தக்காளி - 1

மிளகாய்பொடி - 1 தேக்கரண்டி

கொத்தமல்லிபொடி - 1 தேக்கரண்டி

கசகசா - 2 தேக்கரண்டி

எள் - 2 தேக்கரண்டி

கறிவேப்பிலை - தேவையான அளவு

உப்பு - தேவையான அளவு

செய்முறை:

கத்திரிக்காயை வாயை கீறி வைத்துக் கொள்ளவும். சின்ன வெங்காயத்தை முழுசாக உரித்து வைத்துக் கொள்ளவும். பூண்டு பல்லை தோலுரித்து முழுசாக வைத்துக் கொள்ளவும்.

பச்சைமிளகாயை வாயை கீறிக்கொள்ளவும். எள்ளையும், கசகசாவையும் எண்ணெய் விடாமல் வறுத்து பொடி பண்ணவும்.

ஒரு வாணலியில் 1/2 கப் எண்ணெய் ஊற்றி காயவிடவும். எண்ணெய் காய்ந்ததும் வெங்காயம், பச்சைமிளகாயை போட்டு வதக்கவும். கத்தரிக்காயை போட்டு வதக்கவும்.

பிறகு தக்காளியை போடவும். மிளகாய்பொடி, கொத்தமல்லிபொடி போடவும். புளியை கரைத்து ஊற்றவும்.

ஒரு கொதி வந்ததும் அரைத்த எள், கசகசா பொடியை போடவும். உப்பு சேர்க்கவும்.

அடுப்பை குறைத்து வைத்து எண்ணெய் தெளிந்தவுடன் இறக்கி பரிமாறவும்.

குறிப்புகள்: