உடனடி அடை
தேவையான பொருட்கள்:
அடை உப்புமா மாவு - 1/4 கிலோ
சின்ன வெங்காயம் - 50 கிராம்
பச்சை மிளகாய் - 3
பெருங்காயம் - 1/4 தேக்கரண்டி
கறிவேப்பிலை - இரண்டு கொத்து
தேங்காய் துருவல் - 2 மேசைக்கரண்டி
எண்ணெய் - 3 மேசைக்கரண்டி
நெய் - 2 மேசைக்கரண்டி
உப்பு - தேவையான அளவு
செய்முறை:
வெங்காயம், கறிவேப்பிலை, பச்சை மிளகாயை பொடியாக நறுக்கி வைக்கவும்.
மாவில் உப்பு சேர்த்து கால் லிட்டர் தண்ணீர் ஊற்றி ஒரு மணி நேரம் ஊற வைக்கவும்.
நெய் மற்றும் எண்ணெய்யை கலந்து வைக்கவும். ஒரு மணி நேரம் கழித்து மாவில் பெருங்காயத்தூள், தேங்காய் துருவல், நறுக்கிய வெங்காயம், மிளகாய், கறிவேப்பிலை சேர்த்து கிளறவும்.
அடுப்பில் தோசைக்கல்லை வைத்து எண்ணெய் தடவி ஒரு சிறிய கரண்டி மாவை ஊற்றி தோசை போல் பரப்பவும்.
சுற்றி எண்ணெய் விட்டு ஒரு புறம் வெந்ததும் மறுபுறம் திருப்பிப் போட்டு சிவந்ததும் எடுக்கவும்.
குறிப்புகள்:
தேங்காய் சட்னியுடன் பரிமாறவும்.