இரத்தம் நுரையீரல் கூட்டு
தேவையான பொருட்கள்:
இரத்தம் - 1
நுரையீரல் - 1
சின்ன வெங்காயம் - 100 கிராம்
பச்சைமிளகாய் - 4
மஞ்சள் தூள் - 1 தேக்கரண்டி
மிளகாய்ப்பொடி - 1 தேக்கரண்டி.
மல்லிப்பொடி - 1 தேக்கரண்டி
சோம்பு - 1 தேக்கரண்டி
சீரகம் - 1 தேக்கரண்டி
இஞ்சி, பூண்டு விழுது - 1 தேக்கரண்டி
கடலைப்பருப்பு - 100 கிராம்
தேங்காய் - 3 சில்
பட்டை - 1
கிராம்பு - 1
பிரியாணி இலை - சிறிது
எண்ணெய் - 2 தேக்கரண்டி
உப்பு - தேவையான அளவு
செய்முறை:
இரத்தத்தை தண்ணீர் ஊற்றி வேக வைக்கவும். நுரையீரலையும், கடலைப் பருப்பையும் ஒன்றாக தண்ணீர் ஊற்றி வேகவிடவும்.
வெந்தவுடன் இரத்தத்தையும், நுரையீரலையும் சின்ன சின்ன சதுரங்களாக நறுக்கவும். மஞ்சள் தூள், சீரகம், சோம்பு, 5 வெங்காயம் போட்டு அரைக்கவும்.
கடலைப்பருப்புடன் நறுக்கி வைத்துள்ள இரத்தத்தையும், நுரையீரலையும், பாதி வெங்காயத்தையும், அரைத்தவற்றையும் சேர்த்து வேகவிடவும்.
அதில் மிளகாய்ப்பொடி, மல்லிப்பொடி, உப்பு சேர்க்கவும். தேங்காய், கசகசாவை அரைத்து வைக்கவும்.
ஒரு கடாயில் எண்ணெய் விட்டு பட்டை, கிராம்பு, இலை தாளித்து மீதி வெங்காயம், பச்சை மிளகாய் போட்டு வதக்கி வேக வைத்த கூட்டை போட்டு அரைத்த தேங்காய் கசகசா விழுதை சேர்த்து கொதிக்கவிட்டு இறக்கி பரிமாறவும்.