இனிப்பு சுகியன்

off off off off off 0

தேவையான பொருட்கள்:

பச்சரிசி - 2 ஆழாக்கு

உளுந்து - 1 1/2 ஆழாக்கு

கடலைப்பருப்பு - 200 கிராம்

வெல்லம் - 1/2 கிலோ

தேங்காய்ப்பூ - ஒரு தேங்காய்

ஏலக்காய் - 10

எண்ணெய் - 1/2 லிட்டர்

உப்பு - தேவையான அளவு

செய்முறை:

அரிசி, உளுந்து இரண்டையும் ஒன்றாக 2 மணிநேரம் ஊறவைத்து நைசாக அரைத்துக் கொள்ள வேண்டும். அரைத்த மாவில் உப்பு சேர்த்து இட்லி மாவு பதத்திற்கு இருக்க வேண்டும்.

கடலைப்பருப்பை நன்கு கழுவி 1/2 கிளாஸ் தண்ணீர் ஊற்றி குக்கரில் 4 விசில் வைத்து இறக்கிக் கொள்ள வேண்டும். பருப்பு மசிந்து இருக்கவேண்டும்.

ஒரு அடிகனமான பாத்திரத்தில் பருப்பைப்போட்டு அடுப்பை குறைந்த தீயில் கிளறி துருவிய தேங்காய், தூளாக்கிய வெல்லம், ஏலக்காய்த்தூள் ஆகியவற்றை சேர்த்து உருண்டை பிடிக்கும் அளவிற்கு கிளறிக்கொள்ள வேண்டும்.

ஒரு கடாயில் எண்ணெய் ஊற்றி காய்ந்தவுடன் ஒவ்வொரு உருண்டையாக எடுத்து மாவில் நனைத்து எடுத்து எண்ணெயில் பொரித்து பொன்னிறமானவுடன் எடுக்க வேண்டும்.

குறிப்புகள்: