இட்லி சாம்பார்

off off off off off 0

தேவையான பொருட்கள்:

துவரம் பருப்பு - 100 கிராம்

பாசிப்பருப்பு - 2 தேக்கரண்டி

முருங்கைக்காய் - 1

கத்திரிக்காய் - 100 கிராம்

உருளைக்கிழங்கு - 100 கிராம்

தக்காளி - 100 கிராம்

பச்சை மிளகாய் - 8

சின்ன வெங்காயம் - 15

புளி - கொட்டைப் பாக்களவு

சாம்பார் பொடி - 1/2 தேக்கரண்டி

எண்ணெய் - 2 தேக்கரண்டி

தாளிக்க:

கடுகு, உளுந்து - 1 தேக்கரண்டி

சீரகம் - 1/2 தேக்கரண்டி

வெந்தயம் - 1/2 தேக்கரண்டி

பெருங்காயம் - 1/2 தேக்கரண்டி

காய்ந்த மிளகாய் - 6

பொடியாக நறுக்கிய சின்ன வெங்காயம் - 4

கறிவேப்பிலை - 2 கொத்து

செய்முறை:

காய்கள், உருளைக்கிழங்கு ஆகியவற்றை பொடியாக நறுக்கி கொள்ளவேண்டும். பச்சைமிளகாய் கீறிக் கொள்ளவேண்டும்.

குக்கரில் பருப்புகள், நறுக்கின காய்கள், வெங்காயம், பச்சை மிளகாய், மஞ்சள் தூள், உப்பு ஆகியவற்றுடன் தண்ணீர் 4 கிளாஸ் ஊற்றி மூடி 4 விசில் வைக்க வேண்டும்.

பிரஷர் அடங்கியவுடன் குக்கரை திறந்து ஒரு கரண்டியால் மசித்து கொள்ளவேண்டும்.

ஒரு கடாயில் எண்ணெய் விட்டு தாளிக்க கொடுத்துள்ளவற்றை தாளித்து பருப்புக்கலவையில் கொட்டி, புளி 1/2 கிளாஸ் தண்ணீரில் கரைத்து ஊற்றி, சாம்பார் பொடியைச்சேர்த்து நன்கு கொதிக்க விடவும்.

குறிப்புகள்: