இடியாப்பம்

off off off off off 0

தேவையான பொருட்கள்:

புழுங்கல் அரிசி - 1/2 கிலோ

நல்லெண்ணெய் - 3 டேபிள் ஸ்பூன்

உப்பு - தேவையான அளவு

செய்முறை:

அரிசியை ஐந்து மணி நேரம் ஊற வைத்து நன்கு கழுவி உப்பு சேர்த்து அரைக்கவும். மிகவும் நைசாகவும் இருக்கக் கூடாது. மிகவும் கொர கொரப்பாகவும் இல்லாமல் தோசை மாவு பதத்திற்கு அரைத்து வழிக்கவும்.

அடுப்பில் ஒரு கடாயை (நான் ஸ்டிக்காக இருந்தால் மிகவும் உகந்தது) வைத்து நல்லெண்ணய் ஊற்றி சூடானதும் மாவை ஊற்றி கிண்டவும்.

கெட்டியானதும் இறக்கவும்.

இட்லி பானையை வைத்து தட்டில் மாவை இடியாப்ப நாழியில் போட்டு பிழியவும்.

ஐந்து நிமிடத்தில் எடுத்து சூடாகவே தட்டில் கவிழ்க்கவும்.

குறிப்புகள்:

தேங்காய் பாலுடன் பரிமாறவும்.