அடை





4 நட்சத்திரங்கள் - 1 மதிப்பாய்வின் அடிப்படையில்
தேவையான பொருட்கள்:
பச்சரிசி - 2 ஆழாக்கு
புழுங்கல் அரிசி - 2 ஆழாக்கு
உளுந்து - 1/2 ஆழாக்கு
கடலைப்பருப்பு - 1/2 ஆழாக்கு
துவரம்பருப்பு - 1/2 ஆழாக்கு
பாசிப்பருப்பு - 1/2 ஆழாக்கு
மிளகாய் - 15
சோம்பு - ஒரு தேக்கரண்டி
உப்பு - தேவையான அளவு
தாளிக்க:
வெங்காயம் - 20
தேங்காய் - அரை மூடி
எண்ணெய் - 100 கிராம்
கடுகு, ஊளுத்தம் பருப்பு - 1 தேக்கரண்டி
செய்முறை:
பருப்புகள், அரிசி எல்லாவற்றையும் ஒன்றாக 2 மணி நேரம் ஊறவைத்து மிளகாய், சோம்பு சேர்த்து ஒன்றிரண்டாக அரைக்கவும்.
ஒரு கடாயில் தாளிக்க வேண்டியவற்றை தாளித்து மாவில் கொட்டி உப்புச்சேர்த்து கரைத்து தோசைக்கல்லில் மாவை கனமாக ஊற்றி, வெந்தவுடன் திருப்பி போட்டு வேக விடவேண்டும்.