அகத்திக்கீரை மண்டி

off off off off off 0

தேவையான பொருட்கள்:

அகத்திக்கீரை – ஒரு கட்டு

சின்ன வெங்காயம் – 20

பூண்டு – 3 பல்

பச்சை மிளகாய் – 3

தக்காளி - 1

கடுகு, உளுத்தம் பருப்பு – 1 மேசைக்கரண்டி

சீரகம் – 1/2 தேக்கரண்டி

வரமிளகாய் – 2

மஞ்சள் தூள் – 1/4 தேக்கரண்டி

தேங்காய் – 1/2 மூடி

அரிசி கழுவிய நீர் – 20 மில்லி

எண்ணெய் – 1 மேசைக்கரண்டி

உப்பு – தேவையான அளவு

செய்முறை:

முதலில் பூண்டு, வெங்காயத்தை தோலுரித்து இரண்டாகவும், பச்சை மிளகாயை வாய் பிளந்தும் வைக்கவும்.

தேங்காயை துருவி கெட்டியாக பாலெடுக்கவும். (இருநூறு மில்லி அளவிற்கு)

கீரையை ஆய்ந்து கழுவி வைக்கவும். (நறுக்க வேண்டாம்)

அடுப்பில் கடாயை வைத்து எண்ணெய் ஊற்றி கடுகு, உளுத்தம் பருப்பு, சீரகம், வரமிளகாய் தாளிக்கவும்.

சிவந்ததும் வெங்காயம், பூண்டு, பச்சை மிளகாய் சேர்த்து வதக்கவும்.

இரண்டு நிமிடம் கழித்து மஞ்சள் தூள், தக்காளி சேர்த்து வதக்கவும்

பின் கீரையை சேர்த்து இரண்டு நிமிடம் வதக்கி அரிசி கழுவிய நீர், உப்பு சேர்த்து கீரை நன்கு வேகும் வரை கொதிக்க வைக்கவும்.

பிறகு அடுப்பை சிம்மில் வைத்து தேங்காய்ப் பாலை ஊற்றவும்.

இரண்டு நிமிடம் கழித்து அடுப்பை அணைத்து கீழே இறக்கவும். (கொதிக்க விடக்கூடாது)

குறிப்புகள்: