5 ஸ்டார் பாதாம் ரிச் சூப்
0
தேவையான பொருட்கள்:
பாதாம் - 1/2 கப்
பட்டர் - 4 மேசைக்கரண்டி
மைதா - 4 மேசைக்கரண்டி
பால் - 2 கப்
மிளகு தூள் - 1 1/2 தேக்கரண்டி
நேஸ்லே (nestle) கிரீம் - 8 மேசைக்கரண்டி
தண்ணீர் - 8 கப்
உப்பு - தேவைக்கு
செய்முறை:
பாதாமை வெந்நீரில் ஊற வைத்து தோலெடுத்து பாதியை பாலுடன் சேர்த்து அரைக்கவும். மீதி பாதியை பொடியாக நறுக்கவும்.
பட்டரை சூடுப்படுத்தி உருகும் முன் நறுக்கிய பாதாம், மைதா போட்டு வறுத்து தண்ணீரை சேர்க்கவும்.
கொதித்த பிறகு பாலுடன் அரைத்த பாதாமை சேர்க்கவும்.
கொதித்ததும் பெப்பர், சால்ட் சேர்த்து பத்து நிமிடம் சிம்மில் கொதிக்கவிட்டு இறக்கவும்.
அழகான சூப் கோப்பையில் ஊற்றி ஒரு மேசைக்கரண்டி அளவு கிரீம் போட்டு பரிமாறவும்.
குறிப்புகள்:
கிரீம் வேண்டாம் என்று நினைத்தால், ப்ரெட் ஸ்லைஸை பட்டரில் பொரித்து சிறு துண்டுகளாக வெட்டி போட்டு குடிக்கவும்.