ஹெல்தி சூப்

on on on off off 1 - Good!
3 நட்சத்திரங்கள் - 1 மதிப்பாய்வின் அடிப்படையில்

தேவையான பொருட்கள்:

காலிப்ளவர் இலை மற்றும் தண்டு (வேண்டாம் என்று போடுவது)

பூசணி, சுரைக்காய், தர்பூசணி தோல் (வேண்டாம் என்று போடுவது)

முட்டைக்கோஸ் - 3 இலை

காரட் - 1

வெங்காயம் - 1

தக்காளி - 1

உருளைக்கிழங்கு - பாதி

பச்சை மிளகாய் - பாதி

மிளகு - 1/4 தேக்கரண்டி

வெண்ணெய் - அலங்கரிக்க

செய்முறை:

காய்கறிகள் அனைத்தையும் துண்டுகளாக நறுக்கி வைத்துக் கொள்ளவும்.

வெண்ணெய் தவிர எல்லா காய்கறிகளையும் குக்கரில் போட்டு ஒரு கப் தண்ணீர் ஊற்றி குறைந்த தீயில் வைத்து ஒரு விசில் அல்லது 10 நிமிடம் வரை வேக வைக்கவும்.

வெந்ததும் வெளியில் எடுத்து நன்றாக ஆறிய பிறகு மிக்ஸியில் போட்டு அரைக்கவும்.

அரைத்த கலவையை சல்லடையால் வடிகட்டிக் கொள்ளவும்.

தேவைக்கேற்ப கொதிநீர் சேர்த்து, வெண்ணெயை மேலே மிதக்கவிட்டு பரிமாறவும். தண்ணீர் சூப் வேண்டுமென்றால் மிக்ஸியில் அரைக்காமல் வடிகட்டி வெண்ணெய் மிதக்க விட்டு பரிமாறவும். நார்சத்து அதிகமான சத்தான சூப் ரெடி

குறிப்புகள்: