ஹெர்பல் சூப்

off off off off off 0

தேவையான பொருட்கள்:

துளசி - ஒரு கைப்பிடி

புதினா - ஒரு கைப்பிடி

மல்லித்தழை - ஒரு கைப்பிடி

உருளைக்கிழங்கு - 1

பெரிய வெங்காயம் - 1

தக்காளி - 1

இஞ்சி - ஒரு துண்டு

பூண்டு - 2 பல்

சோம்பு - ஒரு சிட்டிகை

மிளகு - 1/2 தேக்கரண்டி

சீரகம் - 1/2 தேக்கரண்டி

பால் - 1/4 கப்

உப்பு - தேவையான அளவு

செய்முறை:

துளசி, புதினா, மல்லித்தழை ஆகியவற்றை சுத்தம் செய்துக் கொள்ளவும். உருளைக்கிழங்கு, வெங்காயம், தக்காளி, இஞ்சி, பூண்டு ஆகியவற்றை சுத்தம் செய்து பொடியாக நறுக்கிக் கொள்ளவும்.

நறுக்கியவற்றுடன் சோம்பு, மிளகு, சீரகம், உப்பு, சுத்தம் செய்த துளசி, புதினா, மல்லித்தழை சேர்த்து 3 டம்ளர் தண்ணீர் ஊற்றி குக்கரில் வேக வைக்கவும்.

ஒரு விசில் வந்ததும் இறக்கி ஆறவைத்து மிக்ஸியில் அரைத்து வடிகட்டவும்.

மறுபடியும் சிறிது நேரம் அடுப்பில் வைத்து சூடாக்கி பால் சேர்த்து இறக்கவும்.

இறக்கிய பிறகு சூப் பவுலில் புதினா, மல்லித்தழை தூவி பரிமாறவும்.

குறிப்புகள்: