ஹாட் அண்ட் ஸோர் சிக்கன் சூப்
தேவையான பொருட்கள்:
கோழி இறைச்சி - 200 கிராம் (எலும்பில்லாதது)
சிக்கன் ஸ்டாக் - 5 கப்
சிறிய வெங்காயம் - 1
முட்டைகோஸ் - 100 கிராம்
குடைமிளகாய் - 1/2
ஃப்ரெஞ்ச் பீன்ஸ் - 4
பட்டன் காளான் - 2
பூண்டு - 2 பல்
இஞ்சி - சிறுதுண்டு
வெங்காயத்தாள் - 1
கார்ன்ஸ்டார்ச் - 3 மேசைக்கரண்டி
எண்ணெய் - 2 மேசைக்கரண்டி
வெள்ளை மிளகுத்தூள் - 1/2 தேக்கரண்டி
சீனி - 1/2 தேக்கரண்டி
அஜினோமோட்டோ - ஒரு சிட்டிகை
சோயா சாஸ் - 2 மேசைக்கரண்டி
சில்லி சாஸ் - 2 மேசைக்கரண்டி
வினிகர் - 2 மேசைக்கரண்டி
மிளகாய் எண்ணெய் - 1 மேசைக்கரண்டி
உப்பு - தேவையான அளவு
செய்முறை:
கோழி இறைச்சியினை சுத்தம் செய்து, 6 கப் நீர் ஊற்றி சுமார் 10 நிமிடங்கள் வேகவைத்து நீரை தனியே எடுத்து வைத்துக் கொள்ளவும்.
குடை மிளகாய், ஃப்ரெஞ்ச் பீன்ஸ், வெங்காயம், பூண்டினை சுத்தம் செய்து பொடியாக நறுக்கிக் கொள்ளவும். முட்டைக்கோஸினை கழுவி நீளவாக்கில் நறுக்கிக் கொள்ளவும்.
காளானை சுத்தம் செய்து சற்று பெரிய துண்டுகளாக நறுக்கிக் கொள்ளவும். வெங்காயத்தாளினையும் துண்டுகளாக நறுக்கிக் கொள்ளவும்.
ஒரு வாணலியில் எண்ணெய் ஊற்றி சூடாக்கி, அதில் நறுக்கின வெங்காயம், பூண்டு, துருவிய இஞ்சி ஆகியவற்றைப் போட்டு வதக்கவும்.
பிறகு நறுக்கின காளான், குடைமிளகாய், ப்ரெஞ்ச் பீன்ஸ் சேர்த்து மேலும் இரண்டு மூன்று நிமிடங்களுக்கு வதக்கவும்.
காய்கள் நன்கு வெந்தவுடன் மிளகுத்தூள், சீனி, தேவையான உப்பு, அஜினோமோட்டோ, சோயா சாஸ், சில்லி சாஸ் சேர்த்து நன்கு கலக்கவும்.
வேகவைத்து எடுத்துள்ள கோழி இறைச்சியினை சிறு துண்டங்களாக நறுக்கி இத்துடன் சேர்க்கவும். அதன் பின் எடுத்து வைத்துள்ள சிக்கன் ஸ்டாக்கினை ஊற்றி, நன்கு கலக்கி கொதிக்க விடவும். கொதிக்க ஆரம்பித்ததும் காட்ன்ஸ்டார்ச்சினை சேர்த்து கலக்கி மேலும் ஒரு நிமிடத்திற்கு வேகவிடவும்.
அதன் பிறகு வினிகர், மிளகாய் எண்ணெய் சேர்த்து கலக்கி இறக்கி சூப் பவுலில் நறுக்கின வெங்காயத்தாள் தூவிப் பரிமாறவும்.