ஸ்வீட் கார்ன் ஸ்பைசி சூப்
தேவையான பொருட்கள்:
ஸ்வீட் கார்ன் - 1 கப்
தக்காளி - 1
வெங்காயம் - 1
வெண்ணெய் - 3 தேக்கரண்டி
மிளகுத் தூள் - 2 தேக்கரண்டி
அரிசி மாவு - 1 தேக்கரண்டி
சோள மாவு - 2 தேக்கரண்டி
சர்க்கரை - 1 தேக்கரண்டி
பால் - 1 கப்
வெள்ளை மிளகுத் தூள் - 1/4 தேக்கரண்டி
இஞ்சி, பூண்டு விழுது - 1/2 தேக்கரண்டி
பொடியாக நறுக்கிய பூண்டு - 2 தேக்கரண்டி
பொடியாக நறுக்கிய கொத்தமல்லி தழை - 2 தேக்கரண்டி
கரம் மசாலா தூள் - 1/2 தேக்கரண்டி
மேத்தி (காய்ந்த வெந்தய கீரை) - 1/2 தேக்கரண்டி
மஞ்சள் தூள் - ஒரு சிட்டிகை
உப்பு - தேவையான அளவு
செய்முறை:
பாலுடன் மேத்தி, வெள்ளை மிளகுத் தூள், அரிசி மாவு, சோள மாவு, மிளகுத் தூள், சர்க்கரை மற்றும் மஞ்சள் தூள் சேர்த்து கலந்து கொள்ளவும். வெங்காயம், தக்காளியை நறுக்கி வைக்கவும்.
குக்கரில் 2 தேக்கரண்டி வெண்ணெய் சேர்த்து உருகியதும் கரம் மசாலா தூள், நறுக்கிய பூண்டு, கொத்தமல்லித் தழை சேர்த்து பொரியவிடவும்.
பிறகு வெங்காயம் சேர்த்து பொன்னிறமாக வதக்கவும். வெங்காயம் வதங்கியதும் தக்காளி, இஞ்சி, பூண்டு விழுது சேர்த்து பச்சை வாசனை போக வதக்கவும்.
பின் ஸ்வீட் கார்ன் மற்றும் உப்பு சேர்த்து வதக்கவும்.
அதனுடன் பால் கலவையை ஊற்றி கொதிக்கவிடவும்.
கொதி வந்ததும் மீதமுள்ள வெண்ணெயைச் சேர்த்து குக்கரை மூடி 3 விசில் வரும் வரை வைத்து இறக்கி சூப் பவுலில் பரிமாறவும்