ஸ்வீட் கார்ன் சூப் (4)

off off off off off 0

தேவையான பொருட்கள்:

கார்ன் - 200 கிராம்

துருவிய கேரட் - 1

நறுக்கிய முட்டை கோஸ் - 25 கிராம்

நறுக்கிய உருளை கிழங்கு - 1

மிளகு தூள் - 1 1/2 தேக்கரண்டி

கார்ன் ஃப்ளார் - 3 மேசைக்கரண்டி

வினிகர் - 3 சொட்டு

சோயா சாஸ் - 3 சொட்டு

அஜினோமோட்டோ - 1 சிட்டிகை

வெண்ணைய் - 2 மேசைக்கரண்டி

சர்க்கரை - 2 தேக்கரண்டி

உப்பு - 1 1/2 தேக்கரண்டி

செய்முறை:

கார்ன், கேரட், கோஸ், உருளை இவைகளுடன் வெண்ணையை சேர்த்து நன்கு கலக்கி உப்பு, சர்க்கரை சேர்த்து சோயா சாஸ், வினிகர் இதனுடன் 500 ml தண்ணீர் சேர்த்து 5 நிமிடம் மைக்ரோவேவ் ஹையில் வைக்கவும்.

நடுவில் எடுத்து கிளறி மீண்டும் வைக்கவும்.

அவனில் (Oven) இருந்து எடுத்து, அதன் பின் கார்ன் ஃப்ளாரை தண்ணீரில் நீராக கரைத்து, அதனுடன் அஜினோமோட்டோ, மிளகுத்தூள் சேர்த்து மீண்டும் 3 நிமிடம் ஹையில் கொதிக்க விடவும்.

குறிப்புகள்: