ஸ்வீட் கார்ன் சூப் (3)
தேவையான பொருட்கள்:
டின் கார்ன் - 200 கிராம்
துருவிய கேரட் - 1
பொடியாக நறுக்கிய முட்டைகோஸ் - 25 கிராம்
பொடியாக நறுக்கிய உருளைக்கிழங்கு - 1
மிளகுப்பொடி - 1 1/2 தேக்கரண்டி
கார்ன் ப்ளார் - 3 மேசைக்கரண்டி
வினிகர் - 2 துளி
சோயா சாஸ் - 2 துளி
அஜினோ மோட்டோ - 1 சிட்டிகை
வெண்ணைய் - 2 மேசைக்கரண்டி
சர்க்கரை - தேவையான அளவு
உப்பு - தேவையான அளவு
செய்முறை:
டின் கார்ன், கேரட்,கோச்,உருளை இவற்றை ஒன்றாக சேர்த்து அதனுடன் வெண்ணைய், உப்பு, சர்க்கரை சேர்த்து கலந்து சோயாசாஸ், வினிகரை ஊற்றி கலந்து 1/2 லிட்டர் தண்ணீர் சேர்த்து 7 நிமிடம் மைக்ரோவேவ் அவனில் ஹைய்யில் வைக்கவும்.
நடுவில் 2 முறை (3 நிமிடத்திற்கொரு முறை) எடுத்து கிளறிவிடவும்.
கார்ன் ப்ளாரை கொஞ்சம் தண்ணீரில் நீராக கரைக்கவும்.
அவனில் இருந்து வேகவைத்த கலவையை எடுத்து அதில் கரைத்த கார்ன் ப்ளார், பெப்பர், அஜினோமோட்டோ சேர்த்து நன்கு கலந்து மீண்டும் 4 நிமிடம் கொதிக்கவிடவும்.