ஷி ஃபுட் சூப்
தேவையான பொருட்கள்:
இறால் சிறியது - 100 கிராம்
ஸ்குயிட் - 100 கிராம்
அமூர் - 100 கிராம்
லைம் ஜூஸ் -1 தேக்கரண்டி
மைதா - 4 டேபிள் ஸ்பூன்
பூண்டு பல் - 4 (தட்டிக்கொள்ளவும்)
பட்டர் அல்லது மார்கரைன் - 2 தேக்கரண்டி
ஒயிட் பெப்பர் - 1 அல்லது 2 தேக்கரண்டி
சோயா சாஸ் - 1 தேக்கரண்டி
வினிகர் - 2 தேக்கரண்டி (1 பச்சை மிளகாய் பொடியாக நறுக்கி போட்டு வைக்கவும்)
டொமடோ சாஸ் - கொஞ்சம்
உப்பு - தேவையான அளவு
செய்முறை:
மீனை சுத்தம் செய்து கழுவி, ஒரு ஸ்பூன் லைம் ஜூஸ், உப்பு சிறிது கலந்து எடுத்து வைக்கவும்.
ஒரு நாண் ஸ்டிக் பானில் பட்டர் அல்லது மார்கரைன் போட்டு,தட்டிய பூண்டு போட்டு வதக்கி, மைதா மாவு சேர்த்து வதக்கி பின்பு ஒரு லிட்டர் தண்ணீர் சேர்க்கவும். கட்டிப்பிடிக்காமல் மரக்கரண்டி வைத்து கிளறவும். கொதி வந்தவுடன் மீனைப்போட்டு சிம்மில் வைத்து கால் மணி நேரம் வேகவிடவும்.
பின்பு சோயா சாஸ் சேர்க்கவும். ஓயிட் பெப்பர் சேர்க்கவும், உப்பு ருசிக்கு தகுந்தவாறு சேர்க்கவும்.
இதனை வினிகரில் ஊறிய பச்சை மிளகாய், டொமேட்டோ சாஸ் உடன் பரிமாறவும்.