வெஜ் தால் சூப்
0
தேவையான பொருட்கள்:
துவரம் பருப்பு - 2 தேக்கரண்டி
கேரட் - 2 தேக்கரண்டி
பீட்ரூட் - 1 தேக்கரண்டி
வெங்காயம் - 1 தேக்கரண்டி
தக்காளி - 1/2 தேக்கரண்டி
சீரகம் - 5
மிளகு - 1
தேங்காய் எண்ணெய் - ஓரிரு துளி
உப்பு - தேவையான அளவு
செய்முறை:
காய்கறிகளை சுத்தமாக கழுவி சிறிய துண்டுகளாக நறுக்கவும்.
துவரம் பருப்பை தேங்காய் எண்ணெய் சேர்த்து மலர வேக விடவும்.
வெந்ததும் அதில் காய்கறிகளை சேர்க்கவும்.
நன்கு வெந்ததும் அதில் சீரகம், மிளகு உடைத்து போடவும்.
காய்கறிகளை மட்டும் எடுத்து மிக்ஸியில் அரைக்கவும்
அதை மீண்டும் வேக வைத்த நீரில் கலந்து உப்பு சேர்த்து வடிகட்டி லேசாக சூடு செய்யவும்.