வெஜ் சூப் (1)

off off off off off 0

தேவையான பொருட்கள்:

வெஜ்டபுள்ஸ் - 2 கப்

சோயா சாஸ் - 1 தேக்கரண்டி

மிளகு தூள் - தேவைக்கு ( 1/2 தேக்கரண்டி)

அரைத்த தக்காளி - 1/4 கப்

வினிகர் - 1 தேக்கரண்டி

சர்க்கரை - 1 தேக்கரண்டி

கார்ன் ப்ளார் மாவு - 1 1/2 மேசைக்கரண்டி

மேகி வெ கியுப் - 1

உப்பு - தேவைக்கு ( ஒரு தேக்கரண்டி)

செய்முறை:

வெஜ் டேபுள்ஸை ஒரே சீராக கட் பண்ணி ஆறு கப் தண்ணீர் ஊற்றி, உப்பு, மேகி கியூப் போட்டு குக்கரில் தீயை மிதமாக வைத்து ஆறு விசில் விட்டு இறக்கவும்.

ஆறியதும் ப்ளெண்டரில் ஒன்றும் இரண்டுமாய் திரிக்கவும். இல்லையென்றால் மசித்து கொள்ளவும்.

பிறகு அதில் சர்க்கரை, அரைத்த தக்காளி (டின் பேஸ்ட் கூட போடலாம்), சர்க்கரை, மிளகு தூள், வினிகர், சோயா சாஸ் அனைத்தையும் சேர்த்து கொதிக்கவிட்டு ஒரு மேசைக்கரண்டி பட்டர் சேர்க்கவும்.

கடைசியில் கார்ன் ப்ளார் மாவை கால் கப் தண்ணீரில் கரைத்து ஊற்றி நன்கு கொதிக்க விட்டு சூடாக கட்லெட்டுடன் சூப் பவுலில் பரிமாறவும்.

குறிப்புகள்: