வெஜிடபிள் சூப் (1)

off off off off off 0

தேவையான பொருட்கள்:

நெய் - 1 மேசைக்கரண்டி

எண்ணெய் - 1 மேசைக்கரண்டி

கிராம்பு - 2

ஏலம் - 2

பட்டை - 1 சிறிய துண்டு

அரைத்த இஞ்சி - 1/2 தேக்கரண்டி

சிறிய பூண்டு - 5 பற்கள்

நறுக்கிய பொதினா - 1 மேசைக்கரண்டி

நறுக்கிய கொத்தமல்லி - 2 மேசைக்கரண்டி

நறுக்கிய சிறிய வெங்காயம் - 1/4 கப்

நறுக்கிய தக்காளி - 1 கப்

மஞ்சள் தூள் - 1/2 தேக்கரண்டி

வேக வைத்த பருப்பு - 1 மேசைக்கரண்டி

புளி - நெல்லி அளவு

எலுமிச்சை சாறு - 1 தேக்கரண்டி

உப்பு - தேவையான அளவு

கீழே உள்ளவற்றைப் கரகரப்பாகப் பொடிக்கவும்:

சோம்பு - 1 தேக்கரண்டி

மிளகு - 1 தேக்கரண்டி

சீரகம் - 1/2 தேக்கரண்டி

செய்முறை:

புளியை சிறிது நீரில் ஊற வைத்து ஒரு கப் அளவு கெட்டியாக கரைத்துக் கொள்ளவும்.

ஒரு வாணலியை அடுப்பில் வைத்து சூடாக்கி அதில் எண்ணெயையும் நெய்யையும் ஊற்றவும்.

பட்டை, கிராம்பு, ஏலம் இவற்றைப் போட்டு வெங்காயத்தையும் சேர்த்து வதக்கவும்.

சற்று வதங்கியதும் இஞ்சி, பூண்டு சேர்த்து மேலும் சில நிமிடங்கள் வதக்கவும்.

இப்போது தக்காளியையும் மஞ்சள் தூளையும் சேர்த்து நன்கு குழைய வதக்கவும்.

பொதினா, கொத்தமல்லி சேர்த்து ஒரு தடவை நன்கு கலந்து புளி நீருடன் மேலும் 5 கப் நீர் ஊற்றி தேவையான உப்பு சேர்த்து கொதிக்க விடவும்.

சில வினாடிகள் கொதித்ததும் தூளைச் சேர்க்கவும்.

நன்கு கொதித்து வரும்போது பருப்பைச் சேர்த்து இறக்கவும்.

சிறிது ஆறியதும் எலுமிச்சை சாறு சேர்க்கவும்.

குறிப்புகள்: