வெஜிடபிள் சூப்

on on on on off 2 - Great!
4 நட்சத்திரங்கள் - 2 மதிப்பாய்வின் அடிப்படையில்

தேவையான பொருட்கள்:

காரட் -1/2 துண்டு

பீன்ஸ் - 3

கோஸ் - 25 கிராம்

எண்ணெய் - 1/2 தேக்கரண்டி

மைதா - 1 1/2 தேக்கரண்டி

இஞ்சி, பூண்டு விழுது -1/4 தேக்கரண்டி

சோளமாவு - 2 தேக்கரண்டி (சிறிது தண்ணீர் விட்டு கரைத்துக் கொள்ளவும்)

மிளகுத்தூள் - 1/2 தேக்கரண்டி

உப்பு - 1/2 தேக்கரண்டி

செய்முறை:

காய்கறிகளைப் பொடியாக நறுக்கி வேக வைத்துக் கொள்ளவும்.

வாணலியில் எண்ணெய் விட்டுக் காய்ந்ததும், மைதாவைப் போட்டு லேசாக புரட்டிக் கொள்ளவும்.

பிறகு 3 டம்ளர் தண்ணீர் விட்டுக் கொதித்ததும் வேக வைத்த காய்கறிகள், இஞ்சி பூண்டு விழுதைச் சேர்க்கவும்.

இதில் சோள மாவுக் கரைசல், உப்பு சேர்த்து நன்றாகக் கொதித்தும் இறக்கி சூப் பவுலில் மிளகுத் தூள் சேர்த்து பரிமாறவும்

குறிப்புகள்: