வாழைத்தண்டு சூப்
தேவையான பொருட்கள்:
பொடியாக நறுக்கிய வாழைத்தண்டு - 1 கப்
வெங்காயம் - பாதி
தக்காளி - பாதி
மிளகாய் வற்றல் - 1
கொத்தமல்லி, கறிவேப்பிலை - சிறிது
இஞ்சி, பூண்டு - 1/2 தேக்கரண்டி
மிளகு - 1/2 தேக்கரண்டி
சீரகம் - 1/2 தேக்கரண்டி
மஞ்சள் தூள் - சிறிது
தனியா - 1 மேசைக்கரண்டி
எண்ணெய் - 2 தேக்கரண்டி
உப்பு - தேவையான அளவு
செய்முறை:
தனியா, சீரகம், மிளகு மூன்றையும் தனித்தனியாக வறுத்து பொடிக்கவும்.
வெங்காயம், தக்காளி, மிளகாய் வற்றல், கொத்தமல்லி, கறிவேப்பிலை, இஞ்சி, பூண்டு அனைத்தையும் சேர்த்து மிக்ஸியில் அரைக்கவும்.
பாத்திரத்தில் எண்ணெய் விட்டு காய்ந்ததும் அரைத்த விழுது சேர்த்து பச்சை வாசம் போக வதக்கவும்.
இதில் சுத்தம் செய்து பொடியாக நறுக்கிய / துருவிய தண்டு சேர்த்து 6 கப் நீர் விட்டு சிறுந்தீயில் கொதிக்க விடவும்.
பாதி வெந்திருக்கும் நேரம் பொடி செய்த தூள், உப்பு, மஞ்சள் தூள் சேர்த்து மீண்டும் நன்றாக கொதிக்க விடவும்.
கடைசியாக கொத்தமல்லி, கறிவேப்பிலை சிறிது தூவி எடுக்கவும்.
குறிப்புகள்:
உங்கள் காரத்துக்கு ஏற்ப மிளகு அளவை கூட்டவோ குறைக்கவோ செய்யலாம்.