லீக்ஸ் சூப்

off off off off off 0

தேவையான பொருட்கள்:

லீக்ஸ் - 1

உருளைக்கிழங்கு - 1

பட்டர் - 1 மேசைக்கரண்டி

மிளகு - தேவையான அளவு

பட்டை, லவங்கம் - சிறிது

உப்பு - தேவையான அளவு

செய்முறை:

லீக்ஸில் வெளிர் பச்சை நிறமும், வெண்மையாகவும் இருக்கும் பகுதியை மட்டும் நறுக்கி வைக்கவும். இலையாக இருக்கும் பகுதியை ஒதுக்கி விடவும். உருளையை தோல் நீக்கி நறுக்கவும்.

பாத்திரத்தில் வெண்ணெய் விட்டு உருகியதும் பட்டை, லவங்கம் தாளித்து லீக்ஸ் சேர்த்து வதக்கவும். இதை மூடி போட்டு லீக்ஸ் சற்று சாஃப்ட் ஆகும் வரை வதக்கவும்.

இதில் நறுக்கிய உருளை சேர்த்து மீண்டும் வதக்கவும்.

பின் 3 கப் நீர் விட்டு மூடி வேக விடவும். காய் அனைத்தும் நன்றாக வெந்து சாஃப்ட்டான பின் மிக்ஸியில் நீர் இல்லாமல் வடிகட்டி எடுத்து மசிக்கவும். அல்லது ப்லெண்டர் கொண்டு மசித்து விடவும். வடிகட்டிய நீரை வைத்து வைக்கவும்.

இப்போது அரைத்த காய்கறி விழுதை வடித்து வைத்த நீரில் சேர்த்து உப்பு போட்டு அடுப்பில் வைத்து ஒரு கொதி விடவும். கெட்டியாக இருந்தால் தேவைக்கு நீர் சேர்த்து கொதிக்க விடவும்.

கடைசியாக மிளகு பொடித்து சேர்த்து எடுக்கவும்.

க்ரீம், மல்லி தழைக் கொண்டு அலங்கரிக்கலாம்.

குறிப்புகள்:

பட்டை, லவங்கம் சேர்ப்பது உங்கள் விருப்பமே. வேண்டாம் என்றால் விட்டு விடலாம். சேர்ப்பதால் கூடுதல் வாசம் கிடைக்கும்.

புதிதாக அரைத்து சேர்க்கும் மிளகு நல்ல ஃப்ரெஷ் சுவை கொடுக்கும்.

விரும்பினால் வெறும் நீருக்கு பதிலாக காய்கறி வேக வைத்த நீர், அல்லது சிக்கன் வேக வைத்த நீர் சேர்த்தும் லீக்ஸ் வேக வைக்கலாம்.

வேக வைத்த எலும்பில்லாத பொடியாக நறுக்கிய சிக்கன் கூட சேர்க்கலாம்.