மைக்ரோவேவ் காரட் சூப்
0
தேவையான பொருட்கள்:
கேரட் - 1 கப் துண்டுகளாக்கியது
வெங்காயம் - 1 பெரியது
உருளைக்கிழங்கு - 1
பால் - 1 கப்
வெண்னெய் - 1/4 கப்
தண்ணீர் - தேவையான அளவு
மிளகு தூள் - 1/4 தேக்கரண்டி
அஜினோமோட்டொ (வேண்டுமென்றால்) - 1/4 தேக்கரண்டி
உப்பு - தேவைக்கேற்ப
செய்முறை:
ஒரு மைக்ரோவேவ் பாத்திரத்தில் முதலில் வெண்ணெயை 10 செகண்ட்ஸ் வைக்கவும்.
அதில் துண்டுகளாக்கிய கேரட், வெங்காயம், உருளை, பால், பட்டை சேர்த்து மூடி 5 நிமிடங்கள் மைக்ரோவேவில் வைக்கவும்.
கொஞ்சம் ஆறிய பிறகு வெந்த காய்கறிகளை மிக்சியில் அல்லது எமர்ஸன் ஹான்ட் ப்ளண்டரால் மாஷ் செய்யலாம்.
வடிகட்டி அதில் உப்பு, மிளகுதூள் தேவையான அளவு தண்ணீர் சேர்த்து 5 நிமிடங்கள் திறந்து மைக்ரோவேவில் வைக்கவும்.
இப்போது நல்ல கேரட் சூப் ரெடி.
மேலே புதினா கொத்தமல்லி இலை தூவி சூடாக சூப் பவுலில் பரிமாறவும்.