முள்ளங்கி பார்லி சூப் (1)
0
தேவையான பொருட்கள்:
ரோஸ் முள்ளங்கி - 1/4 கிலோ
கேரட் - 1
பார்லி - 150 கிராம்
பால் - 100 மில்லி
மேகிப்பவுடர் - 1/2 தேக்கரண்டி
மிளகுத் தூள் - 1/2 தேக்கரண்டி
மல்லிக்கீரை - 2 கொத்து
உப்பு - ஒரு சிட்டிகை
செய்முறை:
பார்லியை கழுவி அத்துடன் ரோஸ் முள்ளங்கி, கேரட் சேர்த்து வேகவைக்கவும்.
நன்கு வெந்தவுடன் சற்று ஆறவிட்டு, அதை மிக்ஸியின் ஜூஸ் ஜாரில் போட்டு அரைக்கவும்.
பிறகு அத்துடன் பால் கலந்து, மிளகுத்தூள், மேக்கி பவுடர், உப்பு, நைசாக நறுக்கிய மல்லிக்கீரை சேர்த்து ஒரு கொதிவிட்டு எடுத்து சூடாக சூப் பவுலில் பரிமாறவும்.