முருங்கைக்கீரை சூப் (1)
0
தேவையான பொருட்கள்:
பொடியாக நறுக்கிய சாம்பார் வெங்காயம் - 4
பொடியாக நறுக்கிய தக்காளி -1
முருங்கைக்கீரை - ஒரு கைப்பிடி
அரைப்பதற்கு:
மிளகு - 1 தேக்கரண்டி
சீரகம் - 1 தேக்கரண்டி
சோம்பு -1/2 தேக்கரண்டி
தனியா - 3 தேக்கரண்டி
இஞ்சி - சிறிய துண்டு
பூண்டு - 5 பல்
காய்ந்த மிளகாய் - 2
தேங்காய் துருவல் - 1 மேசைக்கரண்டி
உப்பு - தேவையானஅளவு
செய்முறை:
அரைத்த விழுதை பச்சை வாசனை போக கொதிக்க வைக்கவும்.
பிறகு நறுக்கிய வெங்காயம், தக்காளி, முருங்கைகீரையை போட்டு கொதிக்க வைக்கவும்.
கீரை வெந்ததும் இறக்கி சூப் பவுலில் பரிமாறவும்.