முருங்கைக்காய் சூப் (1)

off off off off off 0

தேவையான பொருட்கள்:

முருங்கைக்காய் - 4

தக்காளி - 1

இஞ்சி - 1/2 அங்குலத் துண்டு

பெரிய வெங்காயம் - 2

பூண்டு - 6 பல்

கரம் மசாலாத் தூள் - 1/2 தேக்கரண்டி

பச்சை மிளகாய் - 5

கொத்தமல்லி - 2 கொத்து

புதினா - 2 கொத்து

சோள மாவு - 1 மேசைக்கரண்டி

எலுமிச்சை பழம் - அரை மூடி

உப்பு - 1 மேசைக்கரண்டி

செய்முறை:

முருங்கைக்காயை சிறு சிறு துண்டுகளாக நறுக்கிக் கொள்ளவும்.

பெரிய வெங்காயத்தை தோல் உரித்து பொடியாக நறுக்கவும்.

தக்காளியை துண்டுகளாக நறுக்கவும்.

பச்சை மிளகாயை இரண்டாக கீறி வைக்கவும்.

பூண்டை தோல் உரித்து எடுத்துக் கொள்ளவும். இஞ்சியை தோல் சீவி விட்டு துண்டுகளாக நறுக்கவும். மிக்ஸியில் பூண்டு மற்றும் இஞ்சி இரண்டையும் போட்டு, தண்ணீர் ஒரு மேசைக்கரண்டி ஊற்றி கொரகொரப்பாக அரைத்து எடுத்துக் கொள்ளவும்.

குக்கரில் நறுக்கிய முருங்கைக்காய், தக்காளி, பச்சை மிளகாய், வெங்காயம், இஞ்சி பூண்டு விழுது, உப்பு, கரம் மசாலா தூள் ஆகியவற்றை போட்டு 2 1/2 கப் தண்ணீர் ஊற்றி மூடி வெய்ட் போட்டு 5 நிமிடம் குழைய வேக விடவும்.

5 நிமிடம் கழித்து காய்கள் நன்கு வெந்ததும் இறக்கி வைத்து, மூடியைத் திறந்து கரண்டியால் ஒரு முறை நன்கு கிளறி விடவும்.

ஒரு அகலமான பாத்திரத்தில் காய்கள் வடிகட்டும் வடிகட்டியை வைத்து, அதில் வேகவைத்த காய்கறிகளை போட்டு அதில் உள்ள சாற்றை வடிகட்டி எடுத்துக் கொள்ளவும்.

அதன் பின்னர் வடிகட்டியில் உள்ள காய்கறிகளை கரண்டியை வைத்து நன்கு குழையும்படி மசித்து விடவும்.

பிறகு அந்த மசித்த சக்கையில் அரை கப் தண்ணீர் ஊற்றி நன்கு பிழிந்து சாற்றை வடித்து எடுத்துக் கொள்ளவும்.

அதன் பிறகு வடித்து எடுத்து வைத்திருக்கும் சாறை அடுப்பில் வைக்கவும். ஒரு கிண்ணத்தில் சோளமாவை போட்டு 2 மேசைக்கரண்டி தண்ணீர் ஊற்றி, அதை சாறுடன் ஊற்றி கலக்கி 3 நிமிடம் கொதிக்க விடவும்.

சூப் நன்கு கொதித்ததும் மேலே கொத்தமல்லி தழை, புதினா தூவவும். பரிமாறும் போது மேலே எலுமிச்சை சாறை பிழிந்து பரிமாறவும்.

சுவையும், மணமும் நிறைந்த முருங்கைக்காய் சூப் ரெடி. இதை சூடாக, மேலே மிளகு தூள் தூவி சூப் பவுலில் பரிமாறவும்.

குறிப்புகள்: