முருங்கைக்காய் சூப்
1 - Excellent!
5 நட்சத்திரங்கள் - 1 மதிப்பாய்வின் அடிப்படையில்
தேவையான பொருட்கள்:
முருங்கைக்காய் - 10
பெப்பர் - 1/2 தேக்கரண்டி
உப்பு - 1 தேக்கரண்டி
செய்முறை:
முதலில் முருங்கைக்காயை பெரிய பெரிய துண்டுகளாக நறுக்கி வைக்கவும்.
பின்னர் வெட்டி வைத்துள்ள முருங்கையை தண்ணீரில் போட்டு நன்றாக வேகவைக்கவும்.
நன்றாக வெந்த பிறகு முருங்கையை தண்ணீரில் இருந்து வடிக்கட்டி சிறிது நேரம் ஆறவிடவும்.
முருங்கைக்காய் சிறிது ஆறியவுடன் அதனுள் இருக்கும் சதை பகுதியை ஒரு ஸ்பூன் அல்லது கத்தி வைத்தோ எடுத்து கொள்ளவும். இப்பொழுது முருங்கை சதை பகுதி தயார்.
இப்பொழுது ஒரு பாத்திரத்தில் தண்ணீர் ஊற்றி அத்துடன் இந்த முருங்கை சதை பகுதியை சேர்த்து உப்பு போட்டு சிறிது கொதிக்க விடவும்.
கொதிவந்தவுடன் பெப்பர் சேர்த்து இந்த முருங்கைக்காய் சூப்பினை அருந்த மிகவும் அருமையாக இருக்கும்.