மில்க் செஜ் சூப்
தேவையான பொருட்கள்:
காரட் - 1
பீன்ஸ் - 10
காலிஃப்ளவர் - 2 துண்டு
பட்டாணி - 1/2 கப்
வெங்காயம் - 1
இஞ்சி பூண்டு விழுது - 1 தேக்கரண்டி
செலரி இலை - ஒரு துண்டு
பால் - 1 கப்
அஜினோமோட்டோ - 1/4 மேசைக்கரண்டி
கார்ன்ஃப்ளார் - 1 மேசைக்கரண்டி
மிளகுத்தூள் - தேவைக்கேற்ப
உப்பு - தேவையான அளவு
செய்முறை:
காரட், பீன்ஸ், வெங்காயம், செலரி இலை ஆகியவற்றை பொடியாக நறுக்கிக் கொள்ளவும்.
காலிஃப்ளவரில் வெந்நீர் ஊற்றி சிறிது நேரம் கழித்து எடுத்து பொடியாக நறுக்கிக் கொள்ளவும்.
ஒரு பாத்திரத்தில் மூன்று தேக்கரண்டி தண்ணீர் ஊற்றி நறுக்கிய காலிஃப்ளவர், காரட், பீன்ஸ், வெங்காயம், உப்பு, பட்டாணி சேர்த்து அடுப்பில் வைத்து வேக வைக்கவும்.
வெந்ததும் பொடியாக நறுக்கிய செலரி இலை, அஜினோமோட்டோ, இஞ்சி, பூண்டு விழுது சேர்த்து, மேலும் சில நிமிடங்கள் கொதிக்க வைக்கவும்.
பாலில் கார்ன்ஃப்ளார் கரைத்து ஊற்றி நன்கு கொதித்ததும் இறக்கி மிளகுத்தூள் தூவிப் சூப் பவுலில் பரிமாறவும்.