மின்ஸ்ரோன் சூப்

off off off off off 0

தேவையான பொருட்கள்:

எலும்பு - 200 கிராம்

முட்டைக்கோஸ் - 100 கிராம்

தக்காளி - 100 கிராம்

வெங்காயம் - 100 கிராம்

காரட் - 100 கிராம்

செலரித் தண்டு - 1

டர்னிப்ஸ் - 100 கிராம்

மிளகு - தேவையான அளவு

சீஸ் - 1

வெண்ணெய் - 1 மேசைக்கரண்டி

உப்பு தூள் - தேவையான அளவு

செய்முறை:

முதலில் எலும்பை சுத்தம் செய்து நான்கு கப் தண்ணீர் ஊற்றி வேக வைத்து தண்ணீரை வடிகட்டிக் கொள்ளவும்.

வெங்காயம், தக்காளி, காய்கறிகளைச் சிறு துண்டுகளாக நறுக்கிக் கொள்ளவும்.

ஒரு பாத்திரத்தில் வெண்ணைப் போட்டு உருகிய உடன் நறுக்கி தக்காளி, வெங்காயம், காய்கறிகளைப் போட்டு நன்றாக வதக்கவும்.

காய்கறிகள் நன்றாக வதங்கியவுடன், எலும்பு வேக வைத்த தண்ணீரை ஊற்றி காய்கறிகளை வேக வைக்கவும்.

வெந்ததும் சூப்பை அடுப்பிலிருந்து இறக்கி வடிகட்டி தேவையான அளவு உப்பு, மிளகு தூளைச் சேர்க்கவும்.

விரும்பினால் சீஸை துருவி போட்டுக் கொள்ளலாம்.

குறிப்புகள்: