மார்க்கண்டம் சூப்

on on off off off 1 - Ok!
2 நட்சத்திரங்கள் - 1 மதிப்பாய்வின் அடிப்படையில்

தேவையான பொருட்கள்:

மார்க்கண்டம் – 1/4 கிலோ

தக்காளி – 2

வெங்காயம் – 2

பூண்டு – 6 பல்

இஞ்சி – ஒன்று

மிளகு – 2 தேக்கரண்டி

கடுகு, உளுந்து - 1 தேக்கரண்டி

கறிவேப்பிலை - சிறிது

கொத்தமல்லி - சிறிது

எண்ணெய் - சிறிது

செய்முறை:

மார்க்கண்டத்தை நன்கு சுத்தம் செய்துக் கொள்ளவும்.

பின் குக்கரில் மார்க்கண்டம், வெங்காயம், தக்காளி, மஞ்சள் தூள் போட்டு நன்கு வேக வைக்கவும். மூன்று விசில் வரும் வரை வேக விடவும்

ஒரு கடாயில் சிறிது எண்ணெய் விட்டு வெங்காயம், தக்காளியை வதக்கவும்.

பின்னர் இஞ்சி, பூண்டு இரண்டையும் சிறிது எண்ணெய் விட்டு வதக்கவும்.

அதே போல் மிளகையும் சிறிது எண்ணெய் விட்டு வதக்கவும்.

வதக்கியவற்றை சிறிது நேரம் ஆற வைக்கவும்.

ஆறிய பின் மிக்ஸி ஜாரில் போட்டு அரைத்துக் கொள்ளவும்.

பின் வேக வைத்த மார்க்கண்டத்தில் அரைத்த விழுது, உப்பு, தேவையான அளவு தண்ணீர் ஊற்றி இரண்டு விசில் வரும் வரை வேக வைக்கவும்.

பின் தாளிக்கும் பாத்திரத்தில் எண்ணெய் விட்டு கடுகு, உளுந்து, கறிவேப்பிலை போட்டு தாளிக்கவும்.

தாளித்தவற்றை அந்த சூப்பில் கொட்டவும். பின் கொத்தமல்லி தூவி இறக்கி சூப் பவுலில் பரிமாறவும்.

குறிப்புகள்:

காரம் கூடுதலாக வேண்டும் என்று நினைப்பவர்கள்.

சூப்பின் மேல் மிளகு தூளை தூவிக் கொள்ளலலாம்.