மணத்ததக்காளி கீரை சூப்

off off off off off 0

தேவையான பொருட்கள்:

பெரிய வெங்காயம் - 1

பூண்டு - 6 பல்

தக்காளி - 1

மணத்ததக்காளி கீரை - 1 கப்

எண்ணெய் - தேவையான அளவு

உப்பு - தேவையான அளவு

தாளிக்க:

பட்டை - இரண்டு துண்டு

கிராம்பு - 3

சோம்புத்தூள் - 1/2 தேக்கரண்டி

அரைக்கவும்: (மிக்சியில் அரைத்துக் கொள்ளவும்)

தேங்காய் - 1/4 கப்

பச்சை மிளகாய் - 4

கசகசா - 1/4 தேக்கரண்டி

பொட்டுக்கடலை - 2 தேக்கரண்டி

சோம்பு - 1/2 தேக்கரண்டி

செய்முறை:

தக்காளி, வெங்காயம், பூண்டு ஆகியவற்றை நறுக்கிக் கொள்ளவும்.

கீரையை சுத்தம் செய்து பொடியாக நறுக்கவும்.

வாணலியில் எண்ணெய் ஊற்றி சூடானதும் பட்டை, கிராம்பு, சோம்பு தாளித்து வெங்காயம் சேர்த்து வதக்கவும்.

வெங்காயம் பொன்னிறமானதும் தக்காளி சேர்த்து வதக்கவும்.

தக்காளி வதங்கியதும் அதனுடன் கீரை சேர்த்து வதக்கவும். அடுத்து அரைத்து வைத்திருக்கும் தேங்காய் விழுது சேர்க்கவும். ஒரு நிமிடம் வதக்கி அதனுடன் ஐந்து டம்ளர் தண்ணீர் ஊற்றி, உப்பு சேர்த்து நல்ல பச்சை வாசனை போக கொதிக்கவிட்டு இறக்கி சூப் பவுலில் பரிமாறவும்.

குறிப்புகள்:

இது வயிற்று புண் வாய் வேக்காளத்துக்கு ரொம்ப நல்லது.

இதை சாதத்துடனும் சாப்பிடலாம். சும்மாவும் குடிக்கலாம்.

பச்சை மிளகாய் சேர்க்காமல் மிளகாய் தூள் சேர்த்தும் செய்யலாம் .