மணத்தக்காளி தண்டு சூப்

off off off off off 0

தேவையான பொருட்கள்:

மணத்தக்காளி தண்டு - ஒரு கைப்பிடி

தக்காளி - 2

சின்ன வெங்காயம் - 6

பூண்டு - 4

சீரகம் - 1 தேக்கரண்டி

மிளகு - 10

உப்பு - தேவையான அளவு

செய்முறை:

மணத்தக்காளிக் கீரையை ஆய்ந்த பிறகு, கையால் ஒடிக்கக் கூடிய அளவிற்கு பிஞ்சாக இருக்கும் தண்டை தனியாக ஒடித்து சுத்தம் செய்து வைக்கவும். தக்காளியைப் பொடியாக நறுக்கிக் கொள்ளவும்.

சீரகம் மற்றும் மிளகை நைசாகப் பொடி செய்து கொள்ளவும். வெங்காயம் மற்றும் பூண்டை தட்டி வைக்கவும்.

கீரைத் தண்டு, தக்காளி, பொடி செய்த சீரகம், மிளகு, நசுக்கிய பூண்டு, வெங்காயம், உப்பு மற்றும் 2 டம்ளர் தண்ணீர் சேர்த்து குக்கரில் வைத்து 5, 6 விசில் வரவிட்டு இறக்கி சூப் பவுலில் பரிமாறவும்.

குறிப்புகள்:

இந்த சூப்பை அப்படியேவும் குடிக்கலாம்.

ரசம் போல சாதத்தில் கலந்தும் சாப்பிடலாம்.

தண்ணீருக்குப் பதில் பருப்பு வேக வைத்த தண்ணீர் சேர்த்தும் செய்யலாம்.