மட்டன் சூப் (1)
தேவையான பொருட்கள்:
மட்டன் - 1/4 கிலோ
வெங்காயம் - 1
தக்காளி - 1
பச்சை மிளகாய் - 4
இஞ்சி, பூண்டு விழுது - 1 1/2 தேக்கரண்டி
மிளகு தூள் - 1 தேக்கரண்டி
சீரக தூள் - 1/2 தேக்கரண்டி
மஞ்சள் தூள் - 1/2 தேக்கரண்டி
சோம்பு தூள் - 1/4 தேக்கரண்டி
பாதாம் பருப்பு - 15
பட்டை - 1
கிராம்பு - 3
ஏலக்காய் - 2
புதினா - ஒரு கொத்து
மல்லித் தழை - 2 கொத்து
எண்ணெய் - தாளிக்க
உப்பு - தேவையான அளவு
செய்முறை:
பாதாம் பருப்பை ஊற வைத்துத் தோல் உரித்து அரைத்துக் கொள்ளவும்.
வெங்காயத்தை நீளவாக்கிலும், தக்காளியை துண்டுகளாகவும் நறுக்கிக் கொள்ளவும். பச்சை மிளகாயை கீறி வைத்துக் கொள்ளவும். மல்லி, புதினாவை பொடியாக நறுக்கிக் கொள்ளவும். பிரசர் குக்கரில் மட்டனை சுத்தம் செய்து போட்டு ஒரு தேக்கரண்டி இஞ்சி, பூண்டு விழுது, மிளகு தூள், சீரக தூள், மஞ்சள் தூள், சோம்பு தூள், தக்காளி, பச்சை மிளகாய், மற்றும் உப்பு சேர்த்து வேக விடவும்.
மட்டன் வெந்ததும் அதில் அரைத்த பாதாமை சேர்த்து 2 நிமிடம் கொதிக்க விடவும்.
ஒரு பாத்திரத்தில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் பட்டை, கிராம்பு, ஏலக்காய் போட்டு வதக்கி வெங்காயம், இஞ்சி, பூண்டு விழுது, புதினா, மல்லித் தழை சேர்த்து தாளிக்கவும்.
சூப்பில் தாளித்தவற்றை சேர்த்து கொதிக்க விட்டு இறக்கி சூப் பவுலில் பரிமாறவும்.