ப்ரெஞ்ச் ஆனியன் சூப்

off off off off off 0

தேவையான பொருட்கள்:

எலும்பு வேகவைத்த தண்ணீர் - 4 கப்

பெரிய வெங்காயம் - 4

வெண்ணெய் - 2 தேக்கரண்டி

மிளகுத் தூள் - 1/2 தேக்கரண்டி

துருவிய சீஸ் - 1 மேசைக்கரண்டி

ரொட்டித் தூள் - 4

உப்பு - 1/2 தேக்கரண்டி

செய்முறை:

200 கிராம் எலும்பில் தண்ணீர் ஊற்றி வேகவைத்து 4 கோப்பை வடிகட்டிக் கொள்ளவும்.

வெங்காயத்தை பொடியாக நறுக்கி வெண்ணெய்யுடன் சேர்த்து நன்றாகக் கிளறவும்.

வெங்காயத்தோடு எலும்பு வேகவைத்த தண்ணீரைச் சேர்த்து வெங்காயம் மிருதுவாக வேகும் வரை கொதிக்க விடவும்.

ரொட்டித் துண்டுகளின் மேல் துருவிய சீஸை தூவி ஓவனில் வைத்து பொன்னிறமாக வரும்வரை பேக் செய்து கொள்ளவும்.

கொதிக்கும் சூப்புடன் உப்பு, மிளகு தூளைத் தூவி, ரொட்டித் துண்டுகளைச் சிறியதாக நறுக்கிப் போட்டுப் சூப் பவுலில் பரிமாறவும்.

குறிப்புகள்: