பொன்னாங்கன்னி கீரை சூப்
0
தேவையான பொருட்கள்:
கீரை - ஒரு கைப்பிடி
மஞ்சள்தூள் - 2 சிட்டிகை
சீரகம் - 1/2 தேக்கரண்டி
நசுக்கிய சின்ன வெங்காயம் - 5
நசுக்கிய பூண்டு - 2 பல்
மிளகுத்தூள் - தேவையான அளவு
உப்பு - தேவையான அளவு
செய்முறை:
கீரையை நன்கு அலசி பொடியாக நறுக்கவும்.
பெரிய பாத்திரத்தில் போட்டு 3 கப் தண்ணீர் ஊற்றி வேகவைக்கவும்.
உடன் வெங்காயம்,பூண்டு, மஞ்சள்தூள், சீரகம், உப்பு சேர்க்கவும்.
நன்கு வெந்து வாசம் வரும் சமயம் இறக்கி வைக்கவும்.
பின் பரிமாறும் போது தேவை எனில் மிளகுத்தூள் போட்டு சூப் பவுலில் பரிமாறவும்.